மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடைப்பட்ட கடல் மற்றும் ஆகாய எல்லை தொடர்பான சச்சரவு களுக்குக் கூடிய விரைவில் அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று மலேசிய மக்களும் அந்த நாட்டில் செயல்படும் நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன. இரு நாட்டு உறவை வைத்து தான் எல்லாமே இருக்கிறது என் பதை அவை சுட்டிக்காட்டின. சிங்கப்பூர்-மலேசியா பொருளியல் கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. மலேசியாவின் இரண்டாவது ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளி யாக சிங்கப்பூர் திகழ்கிறது.
ஜோகூரிலிருந்து வேலை பார்க்கவும் படிக்கவும் அன்றாடம் மலே சியர்கள் பலரும் சிங்கப்பூர் வந்து செல்கிறார்கள் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டிய அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையில் பிரச் சினைகள் நீடித்தால் இரு நாடு களுமே பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மலேசியாவின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கத்தின் தலை வர் மைக்கல் காங், இந்த வட்டாரம் உயிர்ப்பித்து இருக்கவும் ஏற்புடைய தாகத் திகழவும் மலேசியாவுக்கும் இதர ஆசியான் நாடுகளுக்கும் இடைப்பட்ட நல்லுறவு முக்கியம் என்று தெரிவித்தார். மலேசியாவின் சீன வர்த்தக தொழில் இணைப்புச் சபையின் தலைமைச் செயலாளர் லோ சியான் சுன், பக்கத்து நாடுகள் முறைத்துக்கொள்ள வேண்டிய தேவையே இல்லை என்றார்.

