சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் இருந்து மலேசிய அரசாங்கத்தின் கப்பல்களை மீட்டுக்கொண்டு, அக்டோபர் 25ஆம் தேதிக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்ற சிங்கப்பூரின் யோசனைக்கு மலேசியா இணங்க முடியாதது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்து உள்ளது. எனினும், சிங்கப்பூருடன் கூடிய இப்போ தைய கடல் எல்லை சச்சரவை அமைதியான முறையில் தான் கையாளப்போவ- தாக மலேசியா அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன் றில் அமைச்சு குறிப்பிட்டது. "அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இரு நாட்டு அதிகாரி- களும் சந்திப்பதற்கு மலேசியா இணங்கியுள்ளதையும் சிங்கப்பூர் வரவேற்கிறது. இந்தச் சந்திப்பில் ஜோகூர் பாரு துறைமுக எல்லை பிரச்சினை குறித்த கருத்துப் பரிமாற்றம் இடம்பெறும்," என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது.
கடல் எல்லை விவகாரம்: மலேசியாவின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிக்கிறது
1 mins read

