பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் பலமுறை குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டு சிறைவாசம் சென்ற 59 வயது ஆடவர் ஒருவர், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அதே நாளில் போலிசுக்கு தொந்தரவு தரும் விதத்தில் 31 தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டார். இந்தக் குற்றத்திற்காக பே கியாவ் கெங்கிற்கு 21 மாதச் சிறைத் தண்டனை நேற்று விதிக்கப்பட்டது. வேலை இல்லாதவரான அவர், வேண்டுமென்றே தொந்தரவு விளைவிக்கும் வண்ணம் அவசர தொலைபேசி எண்களை அழைத்ததாக தம் மீது சுமத்தப்பட்டிருந்த எட்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். பேயிக்கு தண்டனை விதிப்பதில் மற்ற 24 குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.
போலிசுக்கு குறும்புத்தன அழைப்புகள் விடுத்த ஆடவருக்கு சிறை
1 mins read

