மனிதவள அமைச்சு: பணிப்பெண்ணுக்குப் போதுமான உணவு வழங்கப்பட வேண்டும்

மனிதவள அமைச்சு: பணிப்பெண்ணுக்குப் போதுமான உணவு வழங்கப்பட வேண்டும்

1 mins read

பள்ளி விடுமுறை காலத்தில் குடும்பங்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது, இல்லப் பணிப்பெண்களைக் கொண்ட பெரும்பாலான முதலா ளிகள் அவர்களை வீடுகளில் விட்டுச் செல்வது வழக்கம். இவ்வேளையில், முதலாளிகள் உள்ளூரில் இல்லாதபோது தங்க ளுக்கு உண்ண போதுமான உணவு இருக்குமா என்பது குறித்து பணிப்பெண்கள் அக்கறை தெரிவித்துள்ளனர். பணிப்பெண் களுக்கு ஆலோசனையும் ஆதர வும் வழங்கும் அமைப்புகளின் ஃபேஸ்புக் பக்கங்களில் பணிப் பெண்கள் இது குறித்த தங்களது கருத்துகளைப் பதிவுசெய்து உள்ளனர். அவ்வகையில் 26,000க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் உணவு தொடர்பான பணிப்பெண்களின் அக்கறை குறித்து கிட்டத்தட்ட 300 கருத்துகள் பதிவாகின.

முதலாளி வெளிநாடுகளுக்குப் பயணம் செல்லும்போது, இல்லப் பணிப்பெண்களுக்கு உணவு பற்றிய கவலை இருப்பதாக இதன் வழி தெரிகிறது. பொதுவாக, பணிப்பெண்களின் இத்தகைய அக்கறை ஆண்டு முழுவதும் நிலவுவதாக பிலிப் பீன்சை சேர்ந்த பணிப்பெண்ணான 28 வயது போலின் கூறுகிறார். தமது முதலாளி ஒரு வாரம் விடுமுறைக்குச் செல்வதற்கு முன் னால், சாப்பாட்டுச் செலவுக் காக தம்மிடம் 20 வெள்ளியை மட்டுமே கொடுத்துச் சென்றதாக அவர் சொன்னார். முதலாளி தம்முடன் வீட்டில் விட்டுச் சென்ற மகளுக்கான உணவையும் அதே பணத்தில் சமாளிக்க வேண்டிய நிலை போலினுக்கு ஏற்பட்டது.

விவரம்: epaper.tamilmurasu.com.sg