சிங்கப்பூரில் மிதமிஞ்சிய மதுபானப் பழக்கம் அதிகரித்துவரும் ஒரு பிரச்சினை யாக இருந்தாலும், இத னால் பாதிக்கப்படுவோர் விரை வில் உதவி நாடுவதாக மனநல ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. 4.9 மில்லியன் வெள்ளி பொருட்செலவில் 2016ஆம் ஆண் டில் நடத்தப்பட்ட இரண்டாவது சிங்கப்பூர் மனநல ஆய்வின்படி, 24 பேரில் ஒருவர், அதாவது மக்கள்தொகையில் 4.1 விழுக்காட் டினர் தமது வாழ்நாளில் மிதமிஞ்சி ய மதுபானப் பழக்கத் தால் அவதி யுறுவதாகக் கண்டுபிடிக் கப்ப ட்டது. 2010ஆம் ஆண்டில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 32 பேரில் ஒருவர் மித மிஞ்சிய மதுப் பழக்கத்தால் பாதிக்க ப்பட்டதாக அப்போது தெரிய வந்தது. மதுபானத்திற்கு அடிமையா வதால் வேலை, பள்ளி, வீடு இவற்றில் ஒருவருக்கு இருக்கக் கூடிய பொறுப்புகள் பாதிப்படைகி ன்றன.
ஆய்வு: மதுப் பழக்கத்தால் அதிகமானோர் பாதிப்பு
1 mins read

