மார்ச் மாதத்திற்குள் மின் ஸ்கூட்டரை பதிவு செய்வோருக்கு கட்டணம் இல்லை

மார்ச் மாதத்திற்குள் மின் ஸ்கூட்டரை பதிவு செய்வோருக்கு கட்டணம் இல்லை

1 mins read

மின்ஸ்கூட்டர் சாதனத்தைப் பதிவு செய்யும் நடைமுறை ஜன வரி 2ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் மாதத்திற்குள் அந்த சாதனத்தைப் பதிவு செய்வது அவசியம். பதிவு செய்யத் தவறும் மின் ஸ்கூட்டர் பயனாளர்கள் அபராதம், சிறை போன்றவற்றை எதிர்நோக்குவார்கள் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. 'சிங்போஸ்ட்' அஞ்சல் அலு வலகங்களிலோ ஆணையத்தின் 'OneMotoring' இணையத்தளத் திலோ 20 வெள்ளி கட்டணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள லாம். இருப்பினும் மார்ச் 31ஆம் தேதிக்குள் பதிவுசெய்வோர் இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவர். மின் ஸ்கூட்டரைப் பதிவு செய் வதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று மார்ச் மாதம் துடிப்பான நடமாட்டத்துக்கான ஆலோ சனைக் குழு அளித்த பரிந் துரையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.

விவரம்: epaper.tamilmurasu.com.sg