அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி முதல் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி கட் டமைப்பு இரவு 11.30 மணிக்கு மூடப்படும். நிலப்போக்கு வரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி ட்ரெய்ன்ஸ் நிறுவனமும் இணைந்து நேற்று இதைத் தெரிவித்தன. பராமரிப்பு மற்றும் புதுப் பிப்புப் பணிகளை வேகப் படுத்தவும் தீவிரப்படுத்தவும் எஸ்எம்ஆர்டி நிறுவனத்துக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக இந்தப் புதிய நேர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எல்ஆர்டியின் புதிய சேவை நேரம் காரணமாக 920, 922, 973, 974 ஆகிய பேருந்து சேவைகள் கூடுதல் நேரம் இயங்கும். கடந்த 1999ஆம் ஆண்டு எல்ஆர்டி சேவை தொடங்கியதில் இருந்து இயக்கப்பட்டு வரும் எல்லா முதல் தலைமுறை இலகுரக வாகனங்களும் புதிய வாகனங்களாக மாற்றப் படும்.
புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி முன்கூட்டியே மூடப்படும்
1 mins read

