இருவர் பலி; கனரக வாகன ஓட்டுநருக்குச் சிறை, தடை

இருவர் பலி; கனரக வாகன ஓட்டுநருக்குச் சிறை, தடை

1 mins read
1d2909ab-b90c-4ce4-951f-cbef748b6bb7
-

வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலை யில் 2016 அக்டோபர் 27ஆம் தேதி நிகழ்ந்த ஒரு விபத்தில் சைக்கிளோட்டிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டார்கள். அந்தச் சம்பவம் தொடர்பில் கனரக வாகன ஓட்டுநராக பணியாற்றிய சகாதேவன் செங் குட்டுவன், 36, என்பவருக்கு நேற்று 12 வாரச் சிறைத்தண் டனை விதிக்கப்பட்டது. ஐந்தாண்டு காலத்திற்கு அனைத்து வகை வாகனங்களை யும் ஓட்டக்கூடாது என்று அவ ருக்குத் தடை விதிக்கப்பட்டது. சகாதேவன், சம்பவம் நிகழ்ந்த நாளில் காலை சுமார் 7.20 மணிக்கு வேலையைத் தொடங்கி ஏறக்குறைய 17 மணி நேரம் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிய நிலையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அவர் ஓட்டிவந்த வாகனம், வழியில் சைக்கிளோட்டி வந்த மூன்று பேர் மீது மோதிவிட்டது. அவர்களில் ஆங் யீ ஃபோங், 25, என்பவர் அதே இடத்தில் மாண்டுவிட்டார். ஓங் ஸி சியான், 18, என்பவர் பிறகு மருத்துவமனையில் இறந்தார். மார்க்கஸ் லோக் டெக் சூன், 19, என்பவருக்குக் காயம் ஏற்பட்டது. அலட்சியமாக வாகனத்தை ஓட்டி, இருவருக்கு மரணத்தை விளைவித்ததாகக் கூறும் இரண்டு குற்றச்சாட்டுகளை சகாதேவன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.