டாக்சி மோதி 61 வயது பாதசாரி மரணம்; வாகன ஓட்டுநர் கைது

டாக்சி மோதி 61 வயது பாதசாரி மரணம்; வாகன ஓட்டுநர் கைது

1 mins read
ecee8ad1-1d9a-4373-a23e-e086774bddf1
-

ஒரு டாக்சி, பாதசாரி ஒருவர் மீது மோதி அவரைக் கொன்றுவிட்டதை அடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் கைதானார். இந்த விபத்து அப்பர் தாம்சன் ரோட்டில் நேற்றுக் காலை 6.30 மணிக்கு நிகழ்ந்ததாக போலிஸ் தெரிவித்தது. மாண்ட ஆடவருக்கு வயது 61. போலிஸ் விசாரணை நடக்கிறது. விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அந்த ஆடவர் மாண்டுவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் அறிவித்தனர். படம்: ஃபேஸ்புக்/லாரன்ஸ் லோ