17 ஆண்டு சிறைக்குப் பின் கருணையில் விடுவிப்பு

17 ஆண்டு சிறைக்குப் பின் கருணையில் விடுவிப்பு

1 mins read

தன் மனைவியைக் கொல்ல திட்டமிட்டு கடைசியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண் டனி லெர் என்பவரின் உடந்தை யாளராக இருந்த பதின்ம வயதுப் பையன் 17 ஆண்டுகாலம் சிறைத்தண்டனையை அனுப வித்துவிட்டு கடைசியாக வெளியே வந்து இருக்கிறார். அந்த ஆடவருக்கு இப்போது வயது 32. அவர் நவம்பர் மாதம் 2ஆம் தேதி பல நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டார். பல ஆண்டு காலம் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்ட அந்த ஆடவர் மீது கருணை காட்டும்படி அதிபரிடம் கருணை மனு தாக்கல் செய்யப் பட்டது. அதனை அதிபர் ஹலிமா யாக்கோப் ஏற்றுக்கொண்டார். அந்த ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்பது சட் டம். கடந்த 2001 மே மாதம், 15 வயது பையனாக இருந்த அந்த ஆடவர், ஹவ்காங்கில் இருக்கும் வீவக புளோக் ஒன்றின் நான் காவது மின்தூக்கிக்கு வெளியே, அந்தப் புளோக்கில் வசிக்கும் அனி லியோங், 30, என்ற மாதை பல தடவை கத்தியால் குத்தி னார்.