பின்னிருக்கைப் பயணி சாலை விபத்தில் மரணம்

பின்னிருக்கைப் பயணி சாலை விபத்தில் மரணம்

1 mins read
11e7d01e-9995-4ecb-8f22-b6fef47888fd
-

தீவு விரைவுச்சாலையில் புதன் கிழமை இரவு நிகழ்ந்த பல வாக னங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் காயம் அடைந்த, மோட் டார்சைக்கிள் பின்னிருக்கை பயணியான 20 வயது மாது ஒருவர் மாண்டுவிட்டார். அந்த விபத்தில் இரண்டு கார்கள், ஒரு பேருந்து, ஒரு மோட் டார்சைக்கிள், ஒரு லாரி ஆகியவை சம்பந்தப்பட்டு இருந்ததாக போலிஸ் தெரிவித்தது. விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த 22 வயது ஆடவர் சுயநினைவுடன் மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட் டார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு வரைத் தவிர வேறு யாருக்கும் காயமில்லை. யாரும் கைதுசெய் யப்படவில்லை. புலன்விசாரணை நடக்கிறது.

சாலை விபத்து நிகழ்ந்த இடத்தில் மாது ஒருவரை மீட்க அதிகாரிகள் போராடுகிறார்கள். பல அவசர வாகனங்களும் சூழ்ந்து இருப்பதை ஃபேஸ்புக்கில் இடம்பெற்ற காணொளி காட்டியது. படம்: ஃபேஸ்புக்/லைய்னா லும்