ஜாலான் பூன் லேயில் சென்ற ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி காலை சுமார் 6.30 மணிக்கு மாடிப் பேருந்தை ஓட்டிச் சென்ற குவா ஆ பா, 67, என்பவர் சாலையில் ஒரு மாது மீது மோதிவிட் டார். இந்த விபத்து காரணமாக டான் மியோவ் ஹியாங், 46, என்ற அந்த மலேசிய மாது மாண்டுவிட்டார். குற்றத்தை ஒப்புக்கொண்ட குவாவுக்கு ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது.
முன்னாள் பேருந்து ஓட்டுநருக்குச் சிறை
1 mins read
-

