திருடப்பட்ட கடன் அட்டைகள் மூலம் கொள்முதல்; கும்பல் முறியடிப்பு

திருடப்பட்ட கடன் அட்டைகள் மூலம் கொள்முதல்; கும்பல் முறியடிப்பு

1 mins read

எல்லை கடந்து செயல்படும் சட்டவிரோத கும்பல் ஒன்றை சிங்கப்பூர், இந்தோனீசிய அதிகாரிகள் முறியடித்து இருக்கிறார்கள். அந்தக் கும்பல் திருடப்பட்ட கடன் அட்டைகளைப் பயன்படுத்தி இணையத்தில் மோசடியான வழிகளில் $100,000 மதிப்புள்ள பலவற்றையும் கொள்முதல் செய்திருப்பதாக நம்பப்படுகிறது. அந்தக் கும்பல் இந்தோனீசியாவிலிருந்து செயல்பட்டதாக தெரிகிறது. இரு நாட்டு அதிகாரிகளும் புலன்விசாரணை நடத்தியதை அடுத்து இந்தோனீசியாவில் நவம்பர் 29ஆம் தேதிக்கும் டிசம்பர் 5ஆம் தேதிக்கும் இடையில் நான்கு பேர் கைதானார்கள். அவர்களுக்கு வயது 19 முதல் 29 வரை. சிங்கப்பூரில் 35 வயது மாது ஒருவரும் புலன்விசாரணையில் உதவி வருகிறார் என்று சிங்கப்பூர் போலிஸ் தெரிவித்தது.