ஓசிபிசி வங்கி முன்னாள் வர்த்தகர் மீது குற்றச்சாட்டு

ஓசிபிசி வங்கியின் முன்னாள் வர்த்தகரான லு சோர் ஷெங், 40, என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கால கட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல், இந்த வங்கி முறை மூலம் ஏராளமான அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் வாடிக்கையாளர்களின் கணக்குகளைப் பயன்படுத்தி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. முறைகேடான கணினிப் பயனீட்டுச் சட்டத்தின் கீழ் லு மீது 40 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருக்கின்றன. இதர இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்குகிறார். அக்டோபர் தொடக்கத்தில் அவர் குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் தன்னுடைய செய்கைகள் மூலம் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு ஏறக்குறைய $810,000தான் என்று இப்போது அவர் வாதிடுகிறார். லு செய்த காரியங்கள் மூலம் வங்கிக்கு $3.1 மில்லியன் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக நீதிமன்ற பத்திரங்கள் மூலம் தெரியவருகிறது.