‘தி ஆன்லைன் சிட்டிசன்’ இணைய ஆசிரியர், கட்டுரையாளர் மீது அவதூறு வழக்கு

‘தி ஆன்லைன் சிட்டிசன்’ என்ற இணையத்தள ஆசிரியர் டெர்ரி ஸுவும், 36, அந்த ஊடகத்திற்கு கட்டுரை எழுதியதாகக் கூறப்படும் டேனியல் டி கோஸ்டா அகஸ்டின், 35, என்பவரும் நேற்று நீதிமன் றத்தில் முன்னிலையானார்கள். அந்த இருவர் மீதும் அவதூறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. முறைகேடான கணினிப் பயனீட் டுச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றச் சாட்டையும் அகஸ்டின் எதிர் நோக்குகிறார். அகஸ்டின், இந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி இரவு 7.24 மணிக்கு சைனாடவுனில் இருக் கும் இணையக்கூடம் ஒன்றுக்குச் சென்று, சிம் வீ லீ என்வரின் அனுமதி இல்லாமல் அவருடைய யாஹூ மின்னஞ்சல் கணக்கைத் திறந்து அதன் மூலம் ‘தி ஆன் லைன் சிட்டிசன்’ இணையத் தளத் திற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப் பியதாகக் கூறப்படுகிறது. திரு லிம் யார் என்பது தெரியவில்லை.

‘எஸ்டிபியிடம் மசெக எம்பி மன்னிப்பு’ என்பது அவர் அனுப் பிய மின்னஞ்சலுக்குத் தலைப்பாக இருந்தது. அந்த மின்னஞ்சலில் சிங்கப்பூர் அமைச்சரவை உறுப் பினர்களை ஊழல்வாதிகள் என்று அகஸ்டின் அவதூறு கூறியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. தான் கூறியவை தி ஆன்லைன் சிட்டிசன் தளத்தில் பதிவேற்றப்படும் என்ற எண்ணம் அகஸ்டியனுக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதே நாளன்று வில்லி சம் என்ற யாரோ ஒருவரிடமிருந்து வந்த ஒரு கடிதத்தை ‘தி ஆன் லைன் சிட்டிசன்’ வலைத்தளத்தில் வெளியிட அனுமதித்து அதன் மூலம் சிங்கப்பூர் அமைச்சர்களை ஸு அவதூறு செய்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.