அயோன் ஆர்ச்சர்ட் கட்டடத்தில் இவ்வாரத்தில் புதிய கடல் உணவகத்தைத் திறந்துள்ளது ஜம்போ குழுமம். கடந்த பத்து ஆண்டுகளில் அந்தக் குழுமம் கடல் உணவகத்தைத் திறந்து இருப்பது இதுவே முதல்முறை. மொத்தம் 5,400 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த உணவகத்தில் ஒரே நேரத் தில் 160 பேர் அமர்ந்து சாப்பிட முடியும். அத்துடன், நான்கு விஐபி அறைகளும் உள்ளன. இதனுடன் சேர்த்தும் ஜம்போ குழுமம் ஆசியாவில் 17 ஜம்போ கடல் உணவகங்களைக் கொண் டுள்ளது. மேலும் ஒரு கடல் உணவகத்தையும் ஒரு தியோ சியூ உணவகத்தையும் குறைந் தது இரு சுய் வா கிளைகளையும் திறக்க அக்குழுமம் திட்டமிட்டு இருக்கிறது.
பிரபல கடல் உணவகத்தின் கிளை ஆர்ச்சர்டில் திறப்பு
1 mins read

