மாணவருக்குச் சிறை, அபராதம்

மாணவருக்குச் சிறை, அபராதம்

1 mins read

நண்பனின் பாலியல் உறவுக் காணொளியை இணையத்தில் பதிவேற்றம் செய்த பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவருக்கு 14 மாதச் சிறைத் தண்டனையும் $8,500 அபராதமும் விதிக்கப் பட்டது. இங் சுவீ கூன், 24, என்ற அந்த மாணவர் இயூ ஸி யிங், 25, என்ற தம் நண்பரிடம் இருந்து 'வீசேட்' செயலி மூலம் அந்தக் காணொளியைப் பெற் றார். இயூ, 20 வயதுப் பெண் ஒருவருடன் தனது வீட்டில் உறவு கொண்டதை அவருக்குத் தெரியாமல் படம்பிடித்தார். அந்தக் காணொளியை இங் 'டம்ளர்' சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தார். பாதிக்கப்பட்ட பெண் போலிசில் புகார் அளிக்க, இங் சிக்கினார்.