வசைமாரி பொழிவது, மிரட்டல் விடுப்பது, சில நேரங்களில் தாக்குவது என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மீதான துன்புறுத்தல்கள் அதிக ரித்த வண்ணம் உள்ளன. இவ்வாண்டு இதுவரை அத்த கைய துன்புறுத்தல்கள் தொடர் பாக 26 வழக்குகள் பதிவாகி உள்ளன. சென்ற ஆண்டில் இந்த எண்ணிக்கை 23ஆக இருந்தது என்று குடிமைத் தற் காப்புப் படை நேற்று தெரிவித்தது. 2016ஆம் ஆண்டில் 20ஆக இருந்த இந்த எண்ணிக்கை இன்னும் குறைந்தபாடில்லை. ஆம்புலன்சில் ஏற்றிச் சென்ற போது நோயாளி ஒருவர், துணை மருத்துவப் படை சார்ஜண்ட் ஜெரமி லியாங்கின் கழுத்தைத் தமது கைகளால் வளைத்துப் பிடித்துக் கொண்டார். வாகனத் தினுள் இருந்த இன்னோர் ஊழி யருக்கும் அவர் குத்துவிட முயன்றதாகக் கூறப்பட்டது. "வாகனத்தினுள் அவரது ரத்த அழுத்தத்தைச் சோதிக்க முயன்றபோது குத்துவிட முயன் றார். ஆனாலும் அவரால் அது முடியாமல் போனது. கழுத்தை இறுக்கிப் பிடித்ததால் எனக்கு கழுத்து வலி ஏற்பட்டது. எப்படி இருந்தாலும் அவர் என்னுடைய நோயாளிதான்," என்றார் 32 வயதான திரு லியாங். கடந்த ஆண்டு ஜனவரியில் பொங்கோலில் ஒரு கொண்டோ மினியத்தின் அருகே உள்ள திடலில் விழுந்து கிடந்த அந்த ஆடவர், பின்னர் மூன்று மாதங் களுக்குச் சிறையில் அடைக்கப் பட்டார்.
குடிமைத் தற்காப்புப் படையினர் மீதான துன்புறுத்தல் அதிகரிப்பு
1 mins read

