சிறு வர்த்தகர்களுக்கு அதிக பயனளித்து வரும் மின்னிலக்க பணப்பை வசதி

1 mins read

டிபிஎஸ் 'பேலா!' போன்ற மின்னிலக்க பணப்பை (மொபைல் வேலட்) வசதிகளின் அறிமுகத்தால் திறன் பேசிகள் வழி பணம் செலுத்து வோரின் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. இதன்மூலம் சிறு வர்த்தகர்கள் அதிகம் பயனடைந்து வருகின்றனர் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் வர்த்தகப் பள்ளி மேற் கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் டிபிஎஸ் 'பேலா!' வசதி அறிமுகப் படுத்தப்பட்டபின் திறன்பேசி வழி பணம் செலுத்துவது இரட்டிப்பாகி உள்ளதாக அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. குறிப்பாக, நூறு வெள்ளிக்குக் குறைவாகப் பணம் செலுத்த 'பேலா!' போன்ற மின்னி லக்கப் பணப்பை வசதியை சிங்கப் பூரர்கள் அதிகம் பயன்படுத்து கின்றனர். மின்னிலக்கப் பணப்பை வசதி களின் மூலம் நூறு வெள்ளிக்கும் குறைவாக மேற்கொள்ளப்படும் வாராந்திர பணப் பரிவர்த்தனை களின் எண்ணிக்கை 114 விழுக்காடும் நூறு வெள்ளிக்கும் மேல் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள் 88 விழுக்காடும் அதிகரித்துள்ளன.