வீடுகளில் 2,008 தீச்சம்பவங்கள்

வீடுகளில் 2,008 தீச்சம்பவங்கள்

1 mins read

இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில் குடியிருப்புகளில் 2,008 தீச்சம்பவங்கள் இடம்பெற்றதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றுள் கிட்டத்தட்ட பாதிச் சம்பவங்கள் குப்பைகளைப் போடும் சரிவு வழிகளில் ஏற்பட்டவை. சமைக்கும்போது கவனிக்காமல் விட்டது, கழித்துக்கட்டப்பட்ட பொருட்கள், மின்சாதனங்கள் உள்ளிட்டவற்றால் இதர தீச்சம்பவங்கள் நிகழ்ந்தன. சிங்கப்பூர் குடியிருப்புகளில் கடந்த 2017ஆம் ஆண்டு 2,657 தீச்சம்பவங்களும் அதற்கு முந்தைய ஆண்டில் 2,818 தீச்சம்பவங்களும் நிகழ்ந்தன.