மேலும் 16 இடங்களுக்கு ஒலி இரைச்சல் தடுப்புச் சுவர்கள்

வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் ஒலி இரைச்சல் தடுப்புச் சுவர்களைப் பொருத்தும் மூன்றாம் கட்டப் பணிகளுக்கான ஏலக் குத்த கைக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அழைப்பு விடுத்துள் ளது. இந்தப் பணிகளில் தலைக்கு மேல் செல்லும் 5.5 கிலோ மீட்டர் எம்ஆர்டி ரயில் பாதை நெடுகிலும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படும் என்று ஆணையம் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் தெரிவித்தது. இந்தப் பணிகளுக்கான குத் தகை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், தடுப்புச் சுவர் களுக்கான வடிவமைப்பு, அவற்றை உருவாக்கும் பணிகள் ஆகியவை நிறைவுபெற்றவுடன், 2020ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் ஒலி இரைச்சல் தடுப்புச் சுவர் களை ரயில் பாதை நெடுகிலும் பொருத்தும் பணிகள் தொடங்கும். கடந்து செல்லும் ரயில்கள் எழுப்பும் ஒலி அளவை 10 'டெசி பலிலிருந்து' ஐந்து 'டெசிபல்' அளவுக்குக் குறைக்கக்கூடிய இந்தத் தடுப்புச் சுவர்கள் வரும் 2023ஆம் ஆண்டுக்குள் பொருத் தப்பட்டு விடும் என்றும் ஆணையம் கூறியது.

மூன்றாம் கட்டப் பணிகள் முடிவடைந்தவுடன், தீவு முழுவதி லும் 27 கிலோ மீட்டர் எம்ஆர்டி ரயில் பாதை நெடுகிலும் ஒலி இரைச்சல் தடுப்புச் சுவர்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் ஆணையம் மேலும் குறிப்பிட்டது. கிழக்கு-மேற்கு பாதையில் உள்ள பாசிர் ரிஸ், சீமெய், தானா மேரா, கெம்பாங்கான், பாய லேபார், குவீன்ஸ்டவுன், கிளமெண்டி, லேக் சைட் நிலையங்களில் தடுப்புச் சுவர் பொருத்தும் பணிகள் இடம் பெறும். வடக்கு-தெற்கு பாதையில் தடுப்புச் சுவர்கள் பொருத்தும் பணிகள் ஜூரோங் ஈஸ்டில் இரு இடங்கள், புக்கிட் கோம்பாக், உட் லண்ட்சில் இரு இடங்கள், அட் மிரல்டி, செம்பவாங், ஈசூன் நிலை யங்கள் என மொத்தம் 16 இடங் களில் பணிகள் மேற்கொள்ளப் படும். தடுப்புச் சுவர்கள் பொருத்தும் பணிகள், பயணிகள் சேவை நேரத்துக்குப் பிறகும் நடப்பில் உள்ள பராமாரிப்பு மற்றும் புதுப்பிப் புப் பணிகளுடன் ஒருங்கிணைக்கப் பட்டு நடத்தப்படும் என்றும் ஆணையம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!