வர்த்தகம் பெருக இணைய உலகில் அடியெடுத்து வைக்கும் ஈரச்சந்தைகள்

1 mins read

புதிதாகத் தயாரிக்கப்பட்ட யோங் தவ் ஃபு, விற்பனை நாளன்றே பிடிக்கப்பட்ட மீன், புதிதாக வெட்டப்பட்ட இறைச்சி உள்ளிட்ட உணவு மூலப்பொருட்களை நாடும் வாடிக்கையாளர்கள் பலர் ஈரச் சந்தைகளுக்கு ஈர்க்கப்படுகின் றனர். ஆயினும், காலையில் சந்தைக்குச் சென்று பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண் ணிக்கை குறைந்துவர, சிங் கப்பூரின் ஆகப் பழைய ஈரச் சந்தைகளில் ஒன்று, தனது பொருட்களை வாடிக்கையாளர் களுக்கு விற்க புதிய வழி ஒன்றைப் பயன்படுத்துகிறது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட 'மார்க்கெட்ஃபிரெஷ்' என்ற புதிய இணையத்தளத்தில் வாடிக்கை யாளர்கள், தியோங் பாரு சந்தை யில் உள்ள 10 கடைகளிலிருந்து பொருட்களை வாங்கலாம்.

ஈரச்சந்தையில் மீன் கடை ஒன்றை நடத்தும் கோர் சின் புவாங், 35, இந்தத் தளத்தை நிறு வினார். சிறு வயதில் தன் தாயாரின் கடல் உணவுக் கடை யில் அவருக்கு உதவி செய்த திரு கோர், இதன் முக்கியத்து வத்தை நன்கு அறிவதாகத் தெரிவித்தார். "ஈரச்சந்தைகள் அதிகம் வளர மாட்டா. முன்பெல்லாம் புதிதாக வெட்டப்பட்ட இறைச்சியை மக்கள் அதிகம் நாடினர். இப்போது மக்கள் இதனை அவ்வளவாக நாடுவதில்லை என்பதால் இணைய விற்பனை பெருகுகிறது," என்று அவர் கூறினார். தனது ஈரச்சந்தைக் கடையின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாக திரு கோர் சொன்னார். "தரமான பொருட்களை வாங்க ஈரச்சந்தைக்குச் செல்லும் வாடிக் கையாளர் சிலர் தொடர்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களின் எண்ணிக்கையோ குறைந்து வருகிறது," என்று அவர் தெரிவித்தார்.