தீவு விரைவுச்சாலையில் ஆறு வாகனங்கள் நேற்று முன்தினம் பிற்பகலில் ஒன்றோடு ஒன்று மோதியதில் நான்கு பேர் காயமடைந்தனர். சாங்கியை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் ஜாலான் யூனோஸ் வெளி வாயிலுக்கு அருகே நடந்த இந்த விபத்து பற்றிய தகவல் பிற்பகல் 2.08 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரி வித்தனர்.
காயமடைந்த நால்வரில் இருவரான 63 வயது மற்றும் 66 வயது மாதர்கள் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஏழு வயது சிறுமியும் ஒன்பது வயது சிறுமியும் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிறு காயங்களுடன் தப்பிய இவர்கள் அதே நாளில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர். விபத்தால் சேதமடைந்த கார்களைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங் களில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த விபத்து குறித்து போலிஸ் விசாரணை தொடங்கியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் வாகனங்களை அப்புறப்படுத்துகின்றனர். படம்: ஃபேஸ்புக்/ரோட்ஸ்.எஸ்ஜி

