'சிங்கப்பூர் ஹெரால்ட்' இணையத்தளம் முடக்கப்பட்டது

'சிங்கப்பூர் ஹெரால்ட்' இணையத்தளம் முடக்கப்பட்டது

1 mins read

சமுதாய, அரசியல் இணையத் தளமான 'சிங்கப்பூர் ஹெரால்ட்', கண்டிக்கத்தக்கதாகக் கூறப்படும் கட்டுரைகள் சிலவற்றை நீக்கத் தவறியதை அடுத்து அது முடக்கப் படுவதாகத் தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) நேற்று தெரிவித்தது. சிங்கப்பூருக்கும் மலேசியா வுக்கும் இடையிலான கடல் எல் லைப் பிரச்சினையைப் பற்றித் திரித்துக் கூறியதாகச் சொல்லப் படும் எட்டு செய்திக் கட்டுரைகள் இந்தத் தளத்தில் இம்மாதம் 6ஆம் தேதிக்கும் 12ஆம் தேதிக்கும் இடையே வெளியிடப்பட்டன என்று ஆணையம் தெரிவித்தது.

இந்தக் கட்டுரையில் உள்ள தவறான வாக்கியங்களும், 'மிரட் டல்', 'சீண்டல்' உள்ளிட்ட சில உணர்வுமிக்க சொற்களும் சிங்கப் பூருக்கு எதிரான உணர்ச்சிகளைத் தூண்டலாம் என்றும் இதனால் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க இரு நாடுகளும் எடுத்துவரும் முயற்சிகள் பாதிக் கப்படலாம் என்றும் ஆணையம் கூறியது. போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், ராணுவப் படைகளை ஜோகூர் நீரிணைக்கு அனுப்பி மலேசியாவை மிரட்டுவதாகக் கூறும் கட்டுரைத் தலைப்பு ஒன்று, பொது நலன்களுக்கு எதிராக இருப்பதாகவும் இணைய நெறிமுறை கோட்பாடுகளின் படி அவை தடை செய்யப்பட்ட கட்டுரைகளாகக் கருதப்படும் என் றும் ஆணையம் தெரிவித்தது.