‘பருவநிலை விதிமுறைகள் ஏற்கப்பட்டது சிங்கப்பூருக்கு முக்கியத்துவம் வாய்ந்தது’

ருவநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய தாக்கத்தைக் கட்டுப் படுத்த முயலும் ஐக்கிய நாடு களின் செயல்திட்ட கையேட்டை கிட்டத்தட்ட 200 நாடுகள் ஏற் றுக்கொண்டது, குறிப்பாக சிங்கப்பூருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்று கூறிய சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிப்லி, இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்றும் வர்ணித்துள்ளார். போலந்தின் கட்டோவிட்ச நகரில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் இந்தக் கையேட்டை ஏற்று அதனைப் பின்பற்ற கடப் பாடு தெரிவித்த 200 நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

பருவநிலை செயல்திட்டத்திற் கான ஆண்டான இவ்வாண்டை இந்த நிகழ்வு நிறைவு செய் திருப்பதாகத் திரு மசகோஸ் செய்தியாளர்களிடம் தெரிவித் தார். பருவநிலை மாற்றம் தொடர் பான விழிப்புணர்வை ஏற்படுத்த முற்பட்ட இந்த ஆண்டு, சிங்கப் பூரர்களுக்கான பல்வேறு நட வடிக்கைகளைக் கொண்ட ஆக்கபூர்வமான ஆண்டாக இருந்தது என்றும் அமைச்சர் கூறினார். பேச்சுவார்த்தைகளில் ஈடுபட் டோரின் சிரமங்களுக்குத் தீர் வாக உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட இந்தக் கையேடு அமைந்திருப்பதாக அவர் சொன்னார்.

இந்தச் செயல்திட்டத்தில் உள்ள விதிமுறைகளை உறுதி செய்வதற்கான சிக்கலான பேச்சு வார்த்தைகளில் பங்காற்றியது குறித்து சிங்கப்பூர் மகிழ்ச்சிய டைவதாகத் திரு மசகோஸ் பின் னர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார். பல்வேறு அமைச்சுகளைப் பிரதிநிதித்த சிங்கப்பூர் குழு வினர் கடந்த மூன்று ஆண்டு களாக திறமையுடன் பேச்சுவார்த் தைகளில் ஈடுபட்டு உலக நாடு களுடன் இந்த 'கட்டோவிட்ச' கையேட்டை உருவாக்கியுள்ள தாக அவர் தமது பதிவில் குறிப் பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!