ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூரர் கொலை; இந்தியருக்குச் சிறை

ஆஸ்திரேலியாவில் குமாரி மீனா நாராயணன் (படம்) என்ற சிங்கப்பூர் மாதை 32 தடவை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்துக் கொலை செய்ததற்காக இந்தியாவைச் சேர்ந்த செந்தில் குமார் ஆறுமுகம், 36, என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் 2014ல் அந்த மாதைக் கொன்றதாக குவீன்ஸ்லாந்து உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுகம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஆறுமுகத்திற்குத் தீவிர மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால் இந்த வழக்குத் தாமதமடைந்துவந்தது.

வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பு வழக்கறிஞரான டேவிட் நார்டோன், நீதிமன்றத்தில் பல விவரங்களைத் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் படிப்பு விசா பெற்று வசித்து வந்த குமாரி மீனாவுக்கு 2014ல் வயது 27.

அவர் 2013 நவம்பர் மாதம் திருமண இணையத்தளம் மூலம் ஆறுமுகத்தைச் சந்தித்தார்.
அந்த இருவரும் 2013 டிசம்பரில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து 2014 பிப்ரவரியில் அந்த இரண்டு பேரின் குடும்பத்தினர் சந்தித்தனர்.

இருந்தாலும் குமாரி மீனா மீது ஆறுமுகத்துக்குக் கொஞ்சம் சந்தேகம் கிளம்பிவிட்டது.

ஆஸ்திரேலியாவில் வேறு ஓர் ஆடவருடன் தொடர்புகொள்ள அந்த மாது தொடங்கினார் என்பதற்கு ஆதாரமாக சாட்சியமும் கிடைத்தன.

தென் ஆப்பிரிக்காவில் வேலை பார்த்து வந்த ஆறுமுகம், அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக உதவியாளர் ஒருவரிடம் கூறியிருந்தார்.

அந்தப் பெண் தனக்குக் கிடைக்கவில்லை என்றால் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

குமாரி மீனா தன்னை ஏமாற்றி விட்டதாக ஆறுமுகம் நம்பினார். ஒரு துப்பாக்கியை வாங்க முயன்றார் ஆறுமுகம்.

ஆனால் அதை எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்குப் போக முடியாது என்பது ஆறுமுகத்துக்குத் தெரியவந்ததால் ஆஸ்திரேலியா சென்றதும் ஒரு கத்தியை வாங்கிக்கொள்ளலாம் என்று அவர் முடிவு செய்தார்.

2014 மார்ச் மாதம் சுற்றுலா பயணி விசா பெற்று ஆறுமுகம் பிரிஸ்பன் போனார். மவுண்ட் கிராவட்டில் ஹோட்டல் ஒன்றில் தங்கினார். குமாரி மீனாவைச் சந்தித்தார்.

அவர்கள் இருவரும் இருந்த அறையிலிருந்து அலறல் சத்தமும் திடீர் திடீரென இடிபடும் சத்தமும் கேட்டதாக ஏபிசி நியூஸ் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

பிறகு ஹோட்டலின் வரவேற்பு அறையுடன் தொடர்புகொண்ட ஆறுமுகம், தன் காதலி இறந்து விட்டதாகவும் தன் உடலிலிருந்து ரத்தம் கொட்டுவதாகவும் ஹோட்டல் நிர்வாகியிடம் கூறினார்.
போலிஸ் வந்து சேர்ந்தது. அந்த மாதுக்கு அருகே ஆறுமுகம் கிடந்ததைக் காவல்துறை கண்டனர்.

குமாரி மீனாவைக் குத்திவிட்டுப் போலிசிடம் கதையை மாற்றி குமாரி மீனா மரணமடைய விரும்பி அதற்கு உதவுமாறு அவர் தன்னைக் கேட்டுக்கொண்டதாக ஆறுமுகம் தெரிவித்தார்.

இந்தக் கதையைப் போலிசார் நம்பவேண்டும் என்பதற்காக ஆறுமுகம் தன்னையும் குத்திக்கொண்டார். அவர் உடலில் இருந்த கத்திக்குத்து எத்தகையது என்பது மருத்துவச் சோதனைகள் மூலம் தெரியவந்ததாக டெய்லி மெய்ல் ஆஸ்திரேலியா தெரிவித்தது.

அதோடு மட்டுமின்றி, குமாரி மீனா உடலிலிருந்த காயங்கள், தாக்குதலிலிருந்து தப்பிக்க முயலும்போது ஏற்படக்கூடிய காயங்களுடன் ஒத்து இருந்தன என்று நீதி விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆறுமுகத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை அனுபவிக்கத் தொடங்கி 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்குக் கருணைக் காட்டும்படி ஆறுமுகம் விண்ணப்பித்துக்கொள்ள சட்டத்தில் இடம் இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!