சிங்கப்பூரில் நவம்பர் மாதம் ஏற்று மதிகள் 2.6% குறைந்தன. அந்த ஏற்றுமதிகள் தொடர்ந்தாற்போல் ஏழு மாதங்கள் அதிகரித்து வந் தன. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி ஆண்டுக்காண்டு அடிப் படையில் வளர்ச்சி கண்டாலும்கூட நவம்பரில் ஏற்றுமதி அளவு குறைந்துவிட்டது. மின்னணு சாராத பொருட்கள் ஏற்றுமதி பலவீனமாக இருந்ததே இதற்குக் காரணம். எண்ணெய் சாராத ஏற்றுமதிகள் தொடர்ந்தாற் போல் ஏழு மாதகாலமாக அதிக ரித்து வந்தன. இந்த நிலையில் முதன்முதலாக நவம்பரில் ஏற்றுமதிகள் குறைந்து இருக்கின்றன என்று என்டர் பிரைஸ் சிங்கப்பூர் நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
மின்னணுப் பொருட்கள் ஏற்று மதி நவம்பரில் 4.5% கூடியது. இந்த ஏற்றுமதிகள் அக்டோபரில் 3.6% குறைந்திருந்தன. அதேவேளையில், அக்டோபரில் மின்னணு சாராத ஏற்றுமதிகள் 12.7% அதிகரித்து இருந்தன. ஆனால் இந்த ஏற்றுமதி நவம் பரில் 5.2% குறைந்துவிட்டது. சிங்கப்பூரின் பெரிய முக்கிய சந்தைகளுக்கான ஏற்றுமதிகள் அமெரிக்கா, தாய்லாந்து, ஜப்பான், தைவான் நாடுகளைத் தவிர சென்ற மாதம் குறைந்துவிட்டன. சீனா, தென்கொரியா, இந்தோனீசியா நாடுகளுக்கு நடந்த ஏற்றுமதிகள் அதிகளவு குறைந்தன.

