மலேசியாவுடன் சிங்கப்பூர் நன்னம்பிக்கையுடன்பேசும்

1 mins read

எல்லைப் பிரச்சினை பற்றி மலேசியாவுடன் அடுத்த மாதம் பேச்சு நடத்துவதற்கு சிங்கப்பூர் ஆயத்த மாகி வருகிறது என்றும் பக்கத்து நாடான மலேசியாவுடன் நன்னம் பிக்கையுடன் பேச்சு வார்த்தை நடத்த சிங்கப்பூர் விரும்புகிறது என்றும் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரிவித்து இருக் கிறார். இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல எண்ணங்கள் நிலவும் என்றும் அமைதியான, நிபுணத்துவ முறையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மலேசியா கடந்த அக்டோபர் 25ஆம் தேதி ஜோகூர் பாருவின் துறைமுக எல்லையை ஒருதலைப் பட்சமாக விரிவுபடுத்தியது. அதனையடுத்து சிங்கப்பூர் கடற் பகுதிக்குள் மலேசிய கலன்கள் வந்தன. நேற்றைய நிலவரப்படி சிங்கப் பூர் கடற்பகுதியில் இரண்டு மலேசிய கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தன என்று அமைச்சர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

சிங்கப்பூரின் கடற்பகுதிக்குள் இப்போது மலேசிய கப்பல்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்றாலும் அந்தப் பகுதியிலிருந்து முற்றிலும் வெளியேற மலேசியயா மறுப்பது துரதிருஷ்டவசமானது என்று அமைச்சர் தெரிவித்தார். ஆகையால் பேச்சுவார்த்தை எப்படிப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டி இருக்கிறது என் றார் அவர். தன்னைப் பொறுத்த வரையில் மலேசியாவின் இந்த நிலை இருதரப்பு பேச்சுவார்த் தைக்கு உகந்த ஒன்று அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். சிங்கப்பூரும் மலேசியாவும் வரும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் சந்தித்து கடல் எல்லைப் பிரச்சினை பற்றி விவாதிக்க இணங்கி இருக்கின்றன.