கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாளான வரும் திங்கட்கிழமை ரயில் சேவைகளும் குறிப்பிட்ட பேருந்துச் சேவைகளும் நீட்டிக்கப்படும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று அறிவித்தது. வடக்கு-தெற்கு வழித்தடத் தில் கடைசி ரயில் டிசம்பர் 25 அதிகாலை 1.15 மணிக்கு ஆர்ச்சர்ட் எம்ஆர்டி நிலையத்திலிருந்து புறப்பட்டு ஜூரோங் ஈஸ்ட் மற்றும் மரினா சவுத் பியர் நிலையங்களில் முடிவடையும். கிழக்கு-மேற்கு வழித்தடத்தில் கடைசி ரயில் சிட்டி ஹால் எம்ஆர்டி நிலையத்திலிருந்து டிசம்பர் 25 அதிகாலை 1.21 மணிக்குப் புறப்பட்டு பாசிர் ரிஸ் மற்றும் துவாஸ் லிங்க் நிலையங்களில் முடிவடையும்.
வட்டப்பாதையில் கடைசி ரயில் டோபி காட் எம்ஆர்டி நிலையத்திலிருந்து டிசம்பர் 25 அதிகாலை 12.47 மணிக்குப் புறப்படும். அதே நாளன்று அதிகாலை 12.43 மணிக்கு ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்திலிருந்து ரயில் புறப் பட்டு டோபி காட் எம்ஆர்டி நிலையத்தைச் சென்றடையும். புக்கிட் பாஞ்சாங் இலகுரக ரயில் வழித்தடத்தில், சுவா சூ காங் நிலையத்திலிருந்து டிசம்பர் 25 அதிகாலை 2.07 மணிக்கு கடைசி ரயில் புறப்படும். குறிப்பிட்ட எஸ்எம்ஆர்டி பேருந்துச் சேவைகளும் அதிக நேரம் சேவையாற்றும். மேல் விவரங்களுக்கு 1800-336-8900 என்ற எண் மூலம் தொடர்புகொள்ளலாம். அல்லது www.smrt.com.sg என்ற இணையத் தளத்திற்குச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

