குரங்கு மீட்பு; சங்கம் அதிர்ச்சி

குரங்கு குடும்பத்தின் சிற்றின வகையைச் சேர்ந்த ஒரு குரங்கு, பொங்கோலில் காணப்பட்டது. இந்த ஆண்டு இத்துடன் இத் தகைய ஐந்து குரங்குகள் மீட்கப் பட்டு உள்ளன. பொங்கோல் வாக் புளோக் 271Dக்கு வெளியே குரங்கு காணப்பட்டதாக வனவிலங்கு ஆய்வு, கல்விச் சங்கமான 'ஏக் கர்ஸ்' அமைப்புக்கு தகவல் கிடைத்ததாக சேனல் நியூஸ் ஏ‌ஷியா தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து அந்தக் குரங்கு மீட்கப்பட்டது. இது அதிர்ச்சி தருவதாக இந்தக் குழுமம் அறிவித்து இருக்கிறது. இத்தகைய இதர பல குரங்கு களை யாராவது வீடுகளில் சட்ட விரோதமாக பிடித்து வைத்திருக் கலாம் அல்லது இணையம் வழி இத்தகைய குரங்குகளை விற்கும் சாத்தியம் இருக்கிறது என்று இந்தக் குழுமம் கவலை தெரிவித் துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட குரங்கு சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் இந்தச் சங்கம் ஃபேஸ் புக்கில் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!