வேலை பார்ப்போருக்குத் தொழிற்படிப்பு: புதிய சேர்ப்புத் திட்டம் தொடக்கம்

வேலை பார்ப்போருக்குத் தொழிற்படிப்பு: புதிய சேர்ப்புத் திட்டம் தொடக்கம்

1 mins read

வேலை பார்க்கும் பெரியவர்கள் இப்போது ஒரு புதிய ஏற்பாட்டின்கீழ் முழுநேர தொழிற்படிப்பில் சேர பலதுறை தொழிற்கல்லூரிகளுக்கு மனுச் செய்யலாம். அந்த மாணவர் சேர்க்கை ஏற்பாடு, அத்தகைய ஊழியர்களின் அனுபவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அடுத்த ஆண்டு படிப்பிற்கான விண்ணப்பத்தை வரும் வெள்ளிக்கிழமை வரை தாக்கல் செய்யலாம். இதுவரையில் முழுநேரப் படிப்பிற்குப் பெரும் பாலும் கல்வித் தகுதிகளை வைத்தே இத்தகையவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பகுதிநேர படிப்புகளில் சேர அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் ஒவ்வோர் ஆண்டும் தன் முழுநேர டிப்ளமோ படிப்புகளில் வேலை பார்க்கும் சுமார் 400 பெரியவர்களை அனுமதிக்கும். இந்த அளவு, ஒவ்வோர் ஆண்டும் தேவைக்கேற்ப மாறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.