நகைக் கடை திருட்டு தொடர்பில் ஆடவர் கைது

நகைக் கடை திருட்டு தொடர்பில் ஆடவர் கைது

1 mins read
27f07962-6d7d-425e-8372-1507d8501629
-

'யூ டீ ஸ்குவேர்' கடைத்தொகுதி நகைக் கடையிலிருந்து $35,000க்கும் மேற்பட்ட மதிப்பிலான நகைகள் திருட்டுப் போன சம்பவம் தொடர்பில் 23 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூரோங் போலிஸ் பிரிவு மேற்கொண்ட விசாரணையில் அவர் கடந்த திங்கட்கிழமை அன்று கைது செய்யப்பட்டார் என்று போலிஸ் தகவல் வெளியிட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழாண்டு வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று போலிஸ் தெரிவித்தது.

படம்: நெஸ்தியா