தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் இரு புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்

1 mins read
83fe645d-d57d-4b62-ac08-047b842015c8
-

தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஐடிஇ), மாறிவரும் தொழில்துறைக்கு ஏற்றதான இரண்டு புதிய பாடப் பிரிவுகளை அடுத்த மாதம் முதல் அறிமுகம் செய்யும். 'ஐடிஇ' மத்திய கல்லூரி புதிதாக அறிமுகம் செய்யப்படும் காணொளித் தயாரிப்புப் பாடப்பிரிவு, ஊடகத் துறைக்குத் தேவைப்படும் புதிய திறனாளர்களை உருவாக்க முற்படுகிறது. பாடப்பிரிவை முடிப்போர் துணை கேமரா இயக்குநர், துணை ஒளி தொழில்நுட்பர், தயாரிப்பு உதவியாளர் ஆகிய பணிகளில் சேரலாம். இயந்திரவியல், மின்னியல் சேவைகளுக்கான மற்றொரு 'நைட்டெக்' பாடப்பிரிவு தொடங்கப்படவுள்ளது என்று ஐடிஇ தெரிவித்தது.

'ஐடிஇ' கிழக்குக் கல்லூரியிலும் 'ஐடிஇ' மேற்குக் கல்லூரியிலும் நடத்தப்படும் இந்த பாடப்பிரிவை முடிக்கும் மாணவர்கள், கட்டட கட்டமைப்புகளைப் பராமரிக்கும் தொழில்நுட்பர்களாகப் பணியாற்றலாம். 2019ல் ஐடிஇ 44 நைட்டெக், 51 உயர் நைட்டெக், 26 வேலை பயிற்சி வகுப்புகள் ஆகிய பாடப் பிரிவுகளைத் தொடங்கவுள்ளது. ஜிசிஇ 'என்' நிலை சான்றிதழ்களை வைத்திருப்போர், முழு நேர ஐடிஇ பாடத்திட்ட பிரிவுகளுக்கு நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.