புதிய 'கூகல் ஃபிளைட்ஸ்' சேவை சிங்கப்பூரில் தொடக்கம்

புதிய 'கூகல் ஃபிளைட்ஸ்' சேவை சிங்கப்பூரில் தொடக்கம்

1 mins read
6ba0c814-6d4f-4354-93bd-4b90a3901da1
-

விமானப் பயனங்களுக்கான சேவைகளை எளிதாகத் தேட விரும்புவோருக்கு கூகல், தனது புதிய விமானப் பயண முன்பதிவு சேவைத்தளமான 'கூகல் ஃபிளைட்' தளத்தை இங்கு தொடங்கியுள்ளது. புறப்படுவதற்கான தேதியையும் வருகைக்கான தேதியையும் தெரிவு செய்த பிறகு பயனீட்டாளர்களுக்குச் சிறந்த சேவைகளுக்கான பட்டியல் ஒன்றை இந்தத் தளம் வழங்கும். மேலும், குறைந்த விலைக்குச் சிறந்த சேவையைப் பெற காத்திருக்கத் தயாராக உள்ள பயனீட்டாளர்கள், பயண விலைகளையும் மற்ற பயணக் குறிப்புகளையும் பற்றிய விவரங்களை மின்னஞ்சல் வழியாகப் பெற்றுக்கொள்ளலாம்.