முன்னைய 'என்எஸ்பி' தலைவருக்கு அழைப்பாணை

முன்னைய 'என்எஸ்பி' தலைவருக்கு அழைப்பாணை

1 mins read
9e13ea23-7ba8-42cb-86ba-3a4c7518526a
-

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி யின் (என்எஸ்பி) முன்னைய தலைவர் திரு லிம் டியென்னுக்கு எதிராக நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. திரு லிம், கடனாக வாங்கிய 150,000 அமெரிக்க டாலரைத் திரும்பக் கொடுக்காதது தொடர்பில் இந்த அழைப் பாணை அனுப்பப்பட்டபோதும் இந்தக் கடனைத் தாம் பெறவே இல்லை எனத் திரு லிம் கூறினார். இவ்வாண்டு ஆகஸ்டில் அரசு நீதிமன்றத்தின் உதவிப் பதிவாளர் ரெஜினா லிம் சியூ மெய், இந்தக் கடனை திரு லிம், சீனாவைச் சேர்ந்த ஹுவாங் மின்னுக்குத் திரும்பத் தர வேண்டும் எனத் தீர்ப்பளித்தார். பின்னர், இந்தத் தீர்ப்பை ஆதரித்து மாவட்ட நீதிபதி டான் மே டி, முழு விசாரணையற்ற தீர்ப்பை வெளியிட்டார். இதன் தொடர்பில் திரு லிம், உயர் நீதி மன்றத்திடம் மேல்முறையீடு செய்துள்ளார். திரு ஹுவாங் செப்டம்பர் 13 ஆம் தேதிவாக்கில் திரு லிம் டியென்னுக்கு 150,000 டாலரைக் கொடுக்க ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். நவம்பர் 30ஆம் தேதிக்குள் அந்தக் கடனைத் திரும்பத் தருவதாக திரு லிம் கூறியதாக திரு ஹுவாங் சொன்னார்.