தனது சேவை குறித்து பதிவிட்ட எதிர்மறையான கருத்துகளை நீக்காவிடில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தோல் பராமரிப்பு நிலையம் ஒன்று, வாடிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலவசமாக ஒருமுறை தனது சேவையைப் பயன்படுத்திப் பார்க் கும்படி 'டோர் அஸ்தெட்டிக்ஸ்' அழகு நிலையம் வெளியிட்ட விளம்பரத்தை அடுத்து, கடந்த இரு மாதங்களில் வாடிக்கை யாளர்கள் பலர் அந்நிலையத்தை நாடியதாக 'தி நியூ பேப்பர்' செய்தி கூறியது. ஆனால், நேரில் சென்றபின் சேவைத் திட்டத்தில் கையெழுத் திட்டால் மட்டுமே இலவச சேவைக் குத் தகுதிபெற முடியும் என்று ராபின்சன் ரோட்டில் அமைந்துள்ள அந்த அழகு நிலையம் தெரி வித்ததாக அவர்கள் கூறினர். இதனால் ஏமாற்றமடைந்த வாடிக் கையாளர்கள் 'யெல்ப்' சமூக ஊடகத்தில் அந்த அழகு நிலை யத்தின் சேவைக்கு 'ஒற்றை நட்சத்திரத்தை' மட்டும் வழங் கினர்.
இந்த நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் 'டோர் அஸ்தெட்டிக்ஸ்' நிலையத்தின் சார்பில் 'பர்வானி லா' எனும் சட்ட நிறுவனத்தின் மூலம் கோரிக்கைக் கடிதம் ஒன்றை அவர்கள் பெற் றனர். கடிதத்தில், 'யெல்ப் சமூக ஊடகத்தில் அவர்கள் பதிவிட்ட கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும், இல்லையேல் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்' என வலியுறுத்தப்பட்டி ருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 'பர்வானி லா' சட்ட நிறுவனத்தை 'தி நியூ பேப்பர்' தொடர்புகொண்டது. அப்போது, "டோர் அஸ்தெட்டிக்ஸ் நிறுவனத்தைப் பிரதிநிதித்து அந்தக் கடிதத்தை அனுப்பினோம். தனது சேவையைப் பற்றிய வாடிக்கையாளர்களின் சில கருத்துகளை அந்த நிலையம் சுட்டிக்காட்டியது. அவை அந்நிலையத்திற்கு அவப் பெயரைத் தேடித் தரும் வகையில் இருந்தன," என்று அந்தச் சட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு விஜய் பர்வானி விவரித்தார்.

