'அதிக அளவு மயக்க மருந்து உயிரிழப்புக்குக் காரணமில்லை'

1 mins read

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் 2016ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி சிகிச்சைக்காகத் தங்கியிருந்த திருவாட்டி சவ் ஃபொங் ஹெங், 86, உயிரிழந்ததன் தொடர்பில் அவர் உடலில் செலுத்தப்பட்ட மயக்க மருந்தின் அளவு தேவையான அளவைவிட பத்து மடங்காக இருந்தபோதும் அவருடைய மரணத்துக்கு அது காரணமல்ல என்று மரண விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது. ஒரு மணி நேரத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய 4.17 மில்லி லிட்டருக்குப் பதிலாக 41.7 மில்லி லிட்டரை பணியில் இருந்த தாதி திருவாட்டி சவ்வின் உடலில் செலுத்தினார்.

இருப்பினும், உயர் ரத்த அழுத்தம், இறுதிக்கட்ட சிறுநீரக நோய் ஆகியவற்றால் ஏற்கெனவே பாதிப்படைந்து இருந்த திருவாட்டி சவ் இயற்கையாக மாண்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தாதிக்கு அனுபவம் இல்லை என்ற நிலையில் இயந்திரத்தை இயக்க அனுமதிக்கப்பட்டது உட்பட சில கவனத்துக்குரிய கூறுகளை அதிகாரி சுட்டினார்.