சுவா சூ காங் கடை ஒன்றிலிருந்து கிட்டத்தட்ட $35,000 மதிப்புடைய நகைகளைத் திருடியதாக 23 வயது ஆடவர் மீது போலிசார் நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டினர். சென்ற சனிக்கிழமை அன்று இயூ டீ ஸ்குவெர் அங்காடி நிலையத்தில் உள்ள 'கோல்ட் ஸ்கேல்ஸ் ஜுவல்ஸ்' கடையில் இத்திருட்டுச் சம்பவம் நடந்தது. நகைகளைப் பார்க்கும் சாக்கில் கடையை விட்டுப் பலமுறை செல்வதும் மீண்டும் வருவதுமாக இருந்த அந்த ஆடவர், 171 கிராம் எடையுள்ள கழுத்தணி உட்பட மூன்று சங்கிலிகள், ஒரு பதக்கம் ஆகியவற்றுடன் தப்பி ஓடினார். ஆடவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டு ஜூரோங் போலிஸ் பிரிவு அதிகாரிகள் அவரை கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர். திருட்டுக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இயூ டீயில் நகைகளைத் திருடியதாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
1 mins read

