ஒருங்கிணைந்த பயணச் செயலி உருவாக்கம்

ஒருங்கிணைந்த பயணச் செயலி உருவாக்கம்

1 mins read
4133bb9e-2a36-4638-a129-d836634bab25
-

தேசிய டாக்சி சங்கம் (என்டிஏ), தேசிய தனியார் வாடகை வாகனங் கள் சங்கம் (என்பிஎச்விஏ) ஆகியவை இணைந்து புதிய செயலி ஒன்றை உருவாக்க அரசாங்கத்துக்குப் பரிந்துரைத்து உள்ளன. அடுத்த நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டத்துக்காக பொதுமக் கள், பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளைக் கோரும் அரசாங் கத்துக்குப் பேருந்து தடங்களையும் பேருந்து நிறுத்தங்களையும் டாக்சிகள், தனியார் வாடகை வாகனங்கள் பயன்பாட்டுக்கு அனுமதிப்பது, இடைநில்லா தனியார் போக்குவரத்துச் சேவை கள் உட்பட அனைத்து வகையான போக்குவரத்துத் தெரிவுகளையும் பயணிகளுக்கு அளிக்கும் போக் குவரத்து செயலியை உருவாக்கு வது ஆகியவை உள்ளிட்ட பரிந் துரைகளை இவ்விரு அமைப்பு களும் முன்வைத்துள்ளன. "இசைவான, நன்கு இணைக் கப்பட்ட பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு ஆகியவற்றைப் பயணி களுக்கு வழங்குவதன் ஓர் அங்க மாக இடைநில்லா தனியார் போக்குவரத்துச் சேவைகளை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்," என என்டிஏ, என்பிஎச்விஏ அமைப்புகள் நேற்று குறிப்பிட்டன.