குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய இளையர் கைது

குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய இளையர் கைது

1 mins read
11fce7f8-4331-4e80-a073-db850f77a268
-

சேதமடைந்த வாகனத்தின் முன்பகுதியைக் காட்டும் படம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று விடியற்காலை ஏற்பட்ட விபத்தில் வாகனத்தின் கட்டுப் பாட்டை இழந்ததாகக் கூறப்படும் 17 வயது ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியதாக அறியப் படுகிறது. சுவா சூ காங் சாலையை நோக்கிச் செல்லும் டெக் வாய் அவென்யூவில் அதிகாலை 1.08 மணிக்கு விபத்து நிகழ்ந்தது குறித்து போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. வளைவான சாலையில் அதி விரைவாக வந்த வாகனம் சறுக்கியதில் நடுவில் இருந்த தடுப்பில் மோதியதாக விபத்தைக் கண்ட திரு தீபன் ராஜ் கூறினார். தடுப்பை மோதியதில் வாகனத் தின் முன்பகுதி சேதமடைந்தது. வாகனம் சுழன்று அதன் பின் பகுதி சாலைத் தடுப்பை மோதிய பின் வாகனம் சாலையருகில் இருந்த புல்தரை மீது நின்றது. இளைஞருக்கு வாகனமோட்டும் உரிமம் இல்லை என்றும் அவருக் குக் காயங்கள் ஏதும் ஏற்பட வில்லை என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்குத் தெரிவிக் கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.