வெளிநாட்டு ஊழியர்களை ஈர்ப்பதற்காக விதிமுறைகளைத் தளர்த்தும் ஜெர்மன் அரசு

வெளிநாட்டு ஊழியர்களை ஈர்ப்பதற்காக விதிமுறைகளைத் தளர்த்தும் ஜெர்மன் அரசு

1 mins read

பெர்லின்: ஊழியர் பற்றாக்குறை யினால் தவிக்கும் ஜெர்மன், வெளிநாட்டு ஊழியர்களை ஈர்ப்ப தற்காக குடிநுழைவு விதிமுறை களைத் தளர்த்த திட்டமிட்டுள் ளது. ஊழியர் அணி அதிவேகத்தில் மூப்படைந்து வருவதால் புதிய ஊழியர்களை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் அந்நாடு தள்ளப் பட்டுள்ளது. இதற்கான ஜெர்மனியின் முதல் குடிநுழைவு சட்ட மாற்றத்திற்கு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஒப்புதல் அளிக்கவிருக்கிறார். தொழிற்துறையினரும் இந்த மாற்றத்தை ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.

இருப்பினும் குடிநுழைவுச் சட்ட மாற்றத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றாக வேண்டும். ஏற்கெனவே ஏராளமான ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட வெளி நாட்டவர்களை குறிப்பாக முஸ் லிம்கள் குடியேற அனுமதித்ததால் நாட்டு மக்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.