ஐசிஏ: 2020லிருந்து கடவுச்சீட்டு, அடையாள அட்டை விண்ணப்பங்கள் இணையம் வழி

ஐசிஏ: 2020லிருந்து கடவுச்சீட்டு, அடையாள அட்டை விண்ணப்பங்கள் இணையம் வழி

1 mins read
d70ec532-8635-4c43-aefe-3611cb1a0c5c
-

குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) 2020ஆம் ஆண்டிலிருந்து சுமார் 15 சேவைகளுக்கு காகிதப் படிவங்களைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளும்.

கடவுச்சீட்டு, அடையாள அட்டைகள் உட்பட பிறப்பு/இறப்பு சான்றிதழ்கள், முகவரி மாற்றதிற்கான விண்ணப்பங்கள் போன்ற சேவைகளை இணையத்தில் மட்டுமே மேற்கொள்ள வகை செயப்படும். சிங்கப்பூரின் அறிவார்ந்த தேச (Smart Nation) கொள்கைளுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் இத்திட்டம் அமைகிறது.

ஏற்கனவே இச்சேவைகள் 'மைஐசிஏ' (MyICA) இணையத்தளத்தில் உள்ளன என்று ஐசிஏ தெரிவித்தது. சிங்பாஸ் மூலம் பொதுமக்கள் அந்த இணைய சேவைகளைப் பெறலாம்.

சென்ற ஆண்டு கிடைத்த கிட்டத்தட்ட 5.5 மில்லியன் விண்ணப்பங்களில் 88% இணையம் மூலம் சமர்பிக்கப்பட்டன என்றும் ஐசிஏ தெரிவித்தது.

மேல் விவரங்கள் நாளைய அச்சுப்பிரதியில்.