சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டு முதல் பாஸ்போர்ட், அடையாள அட்டையைப் பெற இணையம் வழிதான் விண்ணப்பிக்க முடியும். குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) 15 சேவைகளுக்கு காகித விண்ணப்பப் படிவங்களைப் பயன்படுத்தும் முறையை நிறுத்தவுள்ளது. முகவரி மாற்றத்திற்கான விண்ணப்பம், பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறு வதற்கான வேண்டுகோள் உள்ளிட்ட பலவும் அந்த 15 சேவைகளில் அடங்கும். சிங்கப்பூரின் அறிவார்ந்த நகர் இலக்குக்கு ஆதரவாக இவை எல்லாம் இணையம் வழிச் சேவைகளாக மாறுகின்றன. இச்சேவைகள் இப்போது MyICA என்ற தனது இணைய வாசலில் இடம்பெற்று இருப்பதாக நேற்று இந்த ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. இந்த இணைய வாசலைப் பிரத்தியேக ரகசிய குறியீடு (சிங்பாஸ்) மூலம் பொதுமக்கள் பயன்படுத்த முடியும். இந்தக் கணினிக் களஞ்சியம் எட்டு சேவைகளுடன் இந்த ஆண்டு ஜூனில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மக்கள் பல வற்றுக்கும் ஒரே நேரத்தில் பணம் கட்டிவிட லாம்.
பாஸ்போர்ட் விண்ணப்பம் இனி இணையம் வழிதான்
1 mins read

