சிங்கப்பூர் போஸ்ட் (சிங்போஸ்ட்) நிறுவனம் 'தபால்காரர் இல்லம் வருகை' என்ற தன்னுடைய தொண்டூழியச் செயல்திட்டத்தை நேற்று நாடளாவிய அளவில் அதி காரபூர்வமாகத் தொடங்கியது. அந்தத் திட்டம், அங் மோ கியோ, ஹெண்டர்சன் ஆகிய பகுதிகளில் ஓராண்டு முன்னோடித் திட்டமாக இதுவரையில் நடப்பில் இருந்து வந்தது. அந்தத் திட்டத் தில் அஞ்சல்காரர்கள் தாங்களா கவே முன்வந்து தொண்டூழியம் செய்ய சேர்ந்துகொள்கிறார்கள். கடிதங்களைக் கொடுக்க வீடு களுக்குச் செல்லும்போது அங்கு இருக்கும் முதியவர்களுக்குத் தோழர்களாகி அவர்களிடம் பல விவரங்களையும் தபால்காரர்கள் திரட்டுவார்கள்.
ஓராண்டு காலத்தில் ஏழு அஞ்சல்காரர்கள் குறைந்தபட்சம் வாரம் ஒரு தடவை 11 முதியவர் களை இந்த வகையில் சந்தித்து இருக்கிறார்கள். சிங்போஸ்ட் ஈசூனில் அடுத்த மாதம் தொடங்கி சிங்கப்பூர் முழு வதும் எல்லா பகுதிகளிலும் இந் தத் திட்டத்தைக் கட்டம் கட்டமாக நடப்புக்குக் கொண்டு வரும். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிங்போஸ்ட் நிறுவனம், சமூக சேவை அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டு, தபால்காரர் கள் தாங்கள் அஞ்சல் சேவை வழங்கும் பகுதிகளில் உள்ள முதியவர்களை அடையாளம் கண்டுகொள்ள உதவுகிறது. அத்தகைய முதியோரை தபால் காரர்கள் அவர்களுடைய வீடு களுக்குச் சென்று சந்திப்பர். பொதுவாக முதியவர்களின் நலன் களை அவர்கள் விசாரிப்பார்கள்.

