மனச்சிதைவு நோயாளிக்கு கட்டாய சிகிச்சை உத்தரவு

மனச்சிதைவு நோயாளிக்கு கட்டாய சிகிச்சை உத்தரவு

1 mins read

மனச்சிதைவு நோய் பாதிப்புடைய சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சீக்கிய ஆடவர் ஒருவரைப் பிடித்துத் தள்ளிவிட்டார். அவருடைய தலைப்பாகையைத் தட்டி விட்டதோடு அவருடைய முடியைப் பிடித்தும் இழுத்தார். இந்தச் செயலைச் செய்த கான் கியான் செங், 46, என்பவருக்கு 18 மாத கட்டாய சிகிச்சை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. சரண்பால் சிங் பலிவால் பிரேம் சிங், 30, என்ற அந்த ஆடவரைத் தாக்கியதாகக் கூறும் குற்றச்சாட்டு, அவர் மீது பலவந்தத்தைப் பயன்படுத்தியதாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டு ஆகியவற்றின் பேரில் கான் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இத்தகைய கட்டாய சிகிச்சை உத்தரவு ஒருவருக்குப் பிறப்பிக்கப் பட்டால் அவர் சிறைத்தண்ட னைக்குப் பதிலாக மருத்துவ சிகிச்சையை நாடவேண்டும்.