கடற்துறை பாதுகாப்பு சிறப்பு பணிக்குழுவுக்குத் தற்காப்பு அமைச்சர் இங் பாராட்டு

1 mins read

தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று கடல்துறை பாது காப்பு சிறப்புப் பணிக்குழுவைப் பாராட்டினார். பல சம்பவங் களுக்குப் பதில் நடவடிக்கையாக அண்மைய மாதங்களில் அந்தச் சிறப்புப் பணிக்குழு தன்னுடைய நடவடிக்கைகளை வேகப்படுத்தி இருக்கிறது. டாக்டர் இங் நேற்று சாங்கி கடற்படைத் தளத்திற்குச் சென் றார். அந்தச் சிறப்புப் பணிக் குழு, சிங்கப்பூரின் கடற்பகுதியை ஆகாயம், கடல், தரை வழியாக 24 மணி நேரமும் கண்காணிக்கக் கூடிய ஆற்றலுடன் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அண்மைய மாதங்களில் பல சம்பவங்களுக்குப் பதில் நடவடிக் கையாக தன் நடவடிக்கைகளை சிறப்புப் பணிக்குழு மும்முரப் படுத்தி இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார். பாத்தாம் பயங்கரவாத அமைப்பு, அமெரிக்க அதிபர்= தென்கொரியத் தலைவர் சந்திப்பு, துவாசில் சிங்கப்பூர் கடல் எல் லையில் ஊடுருவல்கள் போன்ற பல சம்பவங்களை அமைச்சர் குறிப்பிட்டார்.