சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 2.96ஆக இருந்தது. நேற்றைய நிலவரப்படி, ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 3.0525ஆக இருந்தது. அரசியல் நிலைத்தன்மை இல்லாததும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியுமே ரிங்கிட்டின் மதிப்பு சரியக் காரணம் எனப் பகுப் பாய்வாளர்கள் கருதுகின்றனர். அத்துடன், சிங்கப்பூர் வெள்ளி யின் மதிப்பு ஏற்றம் கண்டு வருவதும் ஒரு காரணம் என்பது அவர்களின் கருத்து.
ரிங்கிட் மதிப்பு தொடர்ந்து சரிவு
1 mins read
-

