விழாக்காலத்தை முன்னிட்டு மரினா பேயில் ஒளிவெள்ளம், வாணவேடிக்கை

1 mins read
3e376265-818e-4cfb-b329-e061059f60db
-

புத்தாண்டை முன்னிட்டு மரினா பே விழாக்கோலம் பூண்டு அங்கு வருவோரை மகிழ்விக்க இருக்கிறது. மரினா பே சிங்கப்பூர் கவுன்டவுனுக்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒளிவெள்ளத்தில் மூழ்கும் மரினா பே வட்டாரத்தைக் கண்டு களிக்க இம்மாதம் 26ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை பொதுமக்கள் அங்கு செல்லலாம். இந்தச் சிறப்பு ஏற்பாடு குறிப்பிடப்பட்ட நாட்களில் இரவு நேரத்தில் நடைபெறும். பாய்ச்சப்படும் விளக்கொளி மூலம் உள்ளூர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், சமூக நல அமைப்புகளால் பலனடைவோர் ஆகியோரின் கலைப்படைப்புகளைப் பொதுமக்கள் காணலாம். இந்தக் கொண்டாட்டத்தின்போது தி ஃபுலர்ட்டன் ஹோட்டல் சிங்கப்பூர், கலை அறிவியல் அருங்காட்சியகம், மெர்லயன் ஆகியவை மீதும் விளக்கொளி பாய்ச்சப்படும். புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சியை நகர மறுசீரமைப்பு ஆணையம் நடத்துகிறது.

ஒளி வெள்ளத்தில் தி ஃபுலர்ட்டன் ஹோட்டல். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்