அரசாங்க இணையத்தளங்களில் பாதுகாப்பு தொடர்பிலான குறைபாடுகளைக் கண்டுபிடிக்க சிங்கப்பூரின் அரசாங்க தொழில் நுட்ப அமைப்பும் இணையப் பாதுகாப்பு அமைப்பும் இணைந்து செயல்பட இருக்கின்றன. பலவீனங்களை அடையாளம் காணும் நோக்குடன் திட்டத்தில் பங்கெடுக்கும் அமைப்புகளின் அனுமதியுடன் அவற்றின் இணையத்தளங்கள் ஊடுருவப் படும். அதற்கான நிபுணர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த இந்த நிபுணர்களுடன் இரு அமைப்பு களும் இணைந்து செயல்பட இருக்கின்றன. திட்டத்தில் பங் கெடுக்கும் அரசாங்க இணையத் தளங்களை ஊடுருவி அவற்றின் பலவீனங்களைக் கண்டுபிடித்துத் தரும் இணைய ஊடுருவிகளுக்குப் பரிசாகப் பணம் தரப்படும். கண்டுபிடிக்கப்படும் பலவீனங் களின் நிலையைப் பொறுத்து 250 அமெரிக்க டாலரிலிருந்து 10,000 அமெரிக்க டாலர் வரை வழங்கப் படும்.
அரசாங்கம் நடத்தும் இந்தத் திட்டம் இம்மாதத்திலிருந்து அடுத்த மாதம் வரை நடைபெறும். இணையத்தளங்களில் காணப் படும் பாதுகாப்புக் குறைபாடுகள் உடனடியாக சம்பந்தப்பட்ட அமைப்பிடம் தெரிவிக்கப்படும். அதை அடுத்து, அந்தக் குறைபாடுகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
'ஹேக்கர்ஒன்' அமைப்பைச் சேர்ந்த இணைய ஊடுருவிகளின் உதவியால் அரசாங்க இணையத் தளங்களில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடிப்பதே திட்டத்தின் நோக்கமாகும். கோப்புப்படம்

