எஸ்எம்ஆர்டி ஊழியர் சோதனைப் பணியில் ஈடுபட்டபோது ரயில் அவரது பாதம் மீது ஏறியது

எஸ்எம்ஆர்டி ஊழியர் சோதனைப் பணியில் ஈடுபட்டபோது ரயில் அவரது பாதம் மீது ஏறியது

1 mins read
44f914a0-ee71-448b-a4ca-93811857aa40
-

ஜூ கூன் எம்ஆர்டி நிலையத்தில் இம்மாதம் 12ஆம் தேதி நிகழ்ந்த விபத்தின் காரணமாக ஸ்எம்ஆர்டி ஊழியர் ஒருவர் தமது காலை இழந்தார். அவர் தண்டவாளத்தில் எண்ணெய் கசிவுகள் இருக்கின் றனவா என்பதைக் கண்டுபிடிப்பதற் கான சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவரது பாதம் மீது பராமரிப்பு ரயில் ஏறிச் சென்றது. பராமரிப்புப் பணி நிறைவுபெற்ற பிறகு ரயிலை பணிமனைக்குத் திருப்பி அனுப்ப தயார் செய்து கொண்டிருந்த ஆறு பேரைக் கொண்ட குழுவில் பாதிக்கப்பட்ட ஊழியரும் ஒருவர் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

பராமரிப்பு ரயிலின் 'பிரேக்'கை அந்தப் பராமரிப்புக் குழு சோதனை யிட்டுக் கொண்டிருந்தததாக தெரி விக்கப்பட்டது. இச்சோதனையின் போது ரயில் ஓர் அளவுக்கு மட்டுமே நகரும் என்று எஸ்எம்ஆர்டி கூறியது. பாதிக்கப்பட்ட அந்த 59 வயது ஆடவர் பல ஆண்டுகளாக எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் பணி புரிபவர் என்று நம்பப்படுகிறது. தண்டவாளத்தில் எண்ணெய் கசிவுகளைக் கண்டுபிடிக்கும் நோக்குடன் சோதனைப் பணியில் அவர் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவரது வலது பாதம் மீது பராமரிப்பு ரயில் ஏறிச் சென்றதாக அறியப்படுகிறது. "காயமடைந்த ஊழியர் தண்ட வாளத்தில் கிடந்ததைப் பராமரிப்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் பார்த்ததும் 'பிரேக்' சோதனை உடனடியாக நிறுத்தப்பட்டது," என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது. பராமரிப்புக் குழுவைச் சேர்ந்த மற்றவர்கள் காயமுற்ற சக ஊழியருக்கு முதலுதவி செய்ய விரைந்ததாக நிறுவனம் கூறியது.